கவிச் சாரல்

வாழ்க்கைப் போராளி 

தன்வயிற்றுக்கே வழியின்றி
பஞ்சத்திடம் தஞ்சம்புகுந்த
என் பெற்றோர்,,,
உயிர்களின் உணர்வுகளில்
உள்ளம் மகிழ,,,
உலகத்தின் மடியில்
நானோர் வாழ்க்கைப் போராளி,,,
கருணையெனும் காகிதத்தில்
நான் வடித்த கவிதைக்கு
பரிசாய் கிடைத்த
பழைய சோற்றை
கண்ணீரின் உப்பைச் சேர்த்து
செந்நீரைப் பங்கிட்ட
தம்பியோடு உண்டபோது,,,


புத்தகப் பொதி சுமந்த பூக்கள்
புரியாத சோகத்தை மணக்க
வைத்து விட்டு மறைந்து போயின,,,
கண்ணீர் மழ்கிய விழிகளுடன்
கடவுளிடம் கேட்டேன்
மௌனமாய்,,,
இறைவா எனக்கு மட்டும்
ஏனிந்த நிலை????
(தெருமுனையில் தன் தம்பியுடன் பழையசோற்றை பகிர்ந்துண்ட சிறுமிக்காக)