செய்தித் துளிகள்

காணத் தவறாதீர்கள்..தவறினால் 30 வருடமாகலாம்!(இன்று மட்டும்)

 
காணத் தவறாதீர்கள்..தவறினால் 30 வருடமாகலாம்!(இன்று மட்டும்)
இன்று பூமி சந்திரணை முழுமையாக ஆட்கொள்ளப் போகின்றது. கிட்டத்தட்ட ஒருமணி நேரம் முழுமையாக சந்திரனை தனது நிழழுக்குள் பூமி மறைக்கப்போகின்றது. இன்று இரவு 22 மணியளவில் தென்கிழக்குத் திசையில் சந்திரன் தெரியத் தொடங்கும். உங்கள் பூகோள அமைவின் படி சந்திர கிரகணம் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ உங்களுக்குத் தெரியலாம். பிரான்சின் பெரும்பாலான பகுதிகளில் இந்தச் சந்திர கிரகணம் முழுமையாக அவதானிக்கக் கூடியதாக இருக்கும் என பிரான்ஸ் வான்கணிதச் சங்கம் (Association française d’astronomie) தெரிவித்துள்ளது.
இம்முறை சந்திரன் பூமிக்கு மிக அண்மையாக 350,000கிலோமீற்றர் முதல் 380,000 கிலோமீற்றர் வரையான தூரத்திலேயே இருக்கும். 300 கிலோமீற்றர் சுற்றுவட்டம் கொண்ட சந்திரன் பூமியை விட நான்கு மடங்கு சிறியது. கிரகணத்தின் போது அதன் அளவு மிகச் சிறயதாகவே இருக்கும். எனவே உங்கள் விழிகளை அகலத் திறந்து பாருங்கள். இன்று தவறினால் இப்படியான முழுக்கிரகணம் 2041ற்கு முதல் நாம் காணமுடியாது!