விசித்திர உலகம்

உத்திர பிரதேச மாநிலம் பெரைலியைச் சேர்ந்த மனோஜ் அம்ரிடா தம்பதிகளின் பதினைந்து மாத ஆண் குழந்தை அக்சித். இந்தக் குழந்தைக்கு பிறக்கும் போதே கைகளிலும் கால்களிலும் அதிக அளவில் விரல்கள் இருந்தன. இரு கைகளிலும் தலா 7 விரல்களும் இரு கால்களிலும் தலா 10 விரல்களும் இருந்தன. மொத்தம் 34 விரல்களை அக்சித் பெற்றிருந்ததனால் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் அவனது பெயர் இடம்பெற்றது.ஐந்து விரல்கள் இருக்க வேண்டிய கைகளில் அளவுக்கதிகமான விரல்கள் இருந்ததனால் ஐந்து விரல்கள் இருக்க வேண்டிய கைகளில் அளவுக்கதிகமான விரல்கள் இருந்ததனால் அவனால்எந்தப் பொருளையும் கெட்டியாகப் பற்றிக் கொள்ள முடியவில்லை.
அதேபோல் அக்சித்தால் நிற்கவும் முடியாது. இதனால் தேவைக்கு அதிகமாக உள்ள விரல்களை ஆபரேசன் மூலம் அப்புறப்படுத்த முடிவு செய்தனர் பெற்றோர். இதற்காக டெல்லியில் உள்ள All India Institute of Medical Sciences (AIIMS) மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அடுத்த வாரம் அக்சித்திற்கு ஆபரேசன் செய்ய டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர். அக்சித்தின் இரு கைகளிலும் கட்டை விரல்கள் இல்லாத்தைக் கண்டு திகைத்த டாக்டர்கள், என்ன செய்வதென்று யோசித்தனர். இறுதியில் இன்னொரு விரலையே கட்டை விரலாக மாற்றிப் பொருத்த முடிவு செய்தனர். அக்சித் இதுபோன்று அங்ககீனத்துடன் பிறந்ததற்கான காரணத்தை டாக்டர்களால் இதுவரைக்கும் கண்டுபிடிக்க முடியவில்லை.